7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் மாநிலம் முழுவதும் வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் 3 ஆண்டுகளாகக் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அப்போது அரசுக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர்கள் கோஷமிட்டனர்.
இதே போல சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக வருவாய்த் துறை பணியாளர்கள், அலுவலர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களின் இந்தப் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் அரசின் சேவைகளைப் பெற முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறையைச் சேர்ந்த ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை வாரத்திற்கு 2 முறை மட்டுமே நடத்த வேண்டும், பழைய பெண்சன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் போராட்த்தில் ஈடுபட்டனர்.