டெல்லியில் உள்ள நேருவின் அதிகாரப்பூர்வ பங்களா 1,100 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. 17 யார் சாலையில் இந்தப் பங்களா அமைந்துள்ளது.
அதோடு தலைநகர் டெல்லியில் மிகவும் மதிப்புமிக்க முகவரிகளில் இந்தப் பங்களா ஒன்றாகும். 1912 மற்றும் 1930க்கு இடையில் பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் எட்வின் லுட்யென்ஸால் வடிவமைக்கப்பட்ட லுடியன்ஸ் பங்களா மண்டலம், டெல்லியின் மிகவும் பிரத்யேகமான மற்றும் விலையுயர்ந்த பகுதியாகும்.
14 ஆயிரத்து 973 சதுர மீட்டர் பரப்பளவை கொண்டுள்ள இந்த பங்களா 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த பங்களாவின் தற்போதைய உரிமையாளர்கள் ராஜஸ்தானி அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்குமாரி கக்கர் மற்றும் பீனா ராணி ஆவர்.
இந்தச் சூழலில், பங்களா 1,100 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பங்களாவை வாங்குபவரின் அடையாளம் ரகசியமாகவே உள்ளது.