பீகாரில் காங்கிரஸ் – ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் பேரணியின் போது, பிரதமர் மோடியின் தாயார் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துச் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரதமரின் தாயாருக்கு எதிரான விமர்சனம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணிற்கும் எதிரானது எனத் தெரிவித்துள்ளார்.
நமது கலாசாரத்தில் அன்னையருக்கு உயர்ந்த மதிப்பளிக்கப்படும் சூழலில், பீகாரில் நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.