முக்கிய கனிமங்களின் மறுசுழற்சியை ஊக்குவிப்பதற்காக ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், முக்கிய கனிமங்களின் மறுசுழற்சியை ஊக்குவிப்பதற்காக ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்படவுள்ளதாகவும் மத்திய சுரங்கம் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் மின்னணு கழிவுகள்,லித்தியம் அயன் பேட்டரி கழிவுகள், இதர கழிவுகள் ஆகியவற்றில் இருந்து முக்கிய கனிமங்கள் பிரித்தெடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.