ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உடற்தகுதி சோதனையை, விராட் கோலி லண்டனில் இருந்து நிரூபித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சுப்மன் கில், பும்ரா, ரோஹித் ஷர்மா உள்ளிட்டோருக்குப் பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறப்பு மையத்தில் உடற்தகுதி சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், விராட் கோலி மட்டும் பிசிசிஐ அனுமதியுடன் லண்டனில் இருந்தபடி உடற்தகுதியை நிரூபித்துள்ளார். இதனால், விராட் கோலிக்கு மட்டும் விலக்கு ஏன்? எனக் கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.