சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சேர்மனாக என்.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிஎஸ்கே கிரிக்கெட் லிமிடெட் இயக்குனர்கள் குழுவால், என்.சீனிவாசன் மற்றும் அவரது மகள் ரூபா குருநாத் ஆகியோர் அந்நிறுவனத்தின் கூடுதல் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டனர்.
இது கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாகவும், வரவிருக்கும் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கான அறிவிப்பில் அவர்களுடைய நியமனம் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதன் முறையாகச் சிஎஸ்கே போர்டில் இருவரும் இணைகிறார்கள்.