மெக்சிகோவை ஒட்டி புயல் வலுப்பெற்றதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை மற்றும் வெள்ளத்தால் மெக்சிகோவின் பல்வேறு நகரங்கள் ஏற்கனவே நீரில் மூழ்கியுள்ளது. இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டதுடன், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால், மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தப் புயல் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை வலுவிழக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.