திருப்பூரில் பனியன் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
கருவம்பாளையம் பகுதியில் ஆனந்த் என்பவர், குடோனை வாடகைக்கு எடுத்துப் பனியன் வியாபாரம் செய்து வருகிறார். குடோனில் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டரை ஆன் செய்துள்ளார்.
அப்போது திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மளமளவெனப் பரவிய தீ, குடோன் முழுவதும் பரவியது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், குடோனில் பற்றிய தீயைப் போராடி அணைத்தனர்.
விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பனியன்கள் சேதமடைந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.