திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காவல்துறை நடவடிக்கையைக் கண்டித்து 50க்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருச்சி ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், நேற்று முன்தினம் இரண்டு நபர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து விசாரணை நடத்தியதில் கடந்தாண்டு தியாகராஜன் என்பவர்க் கொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கத்தில் சுரேஷ் கொலைச் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது சம்மந்தமாகத் தியாகராஜனின் சகோதரர் கல்பேஷ் உட்பட 3 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, தனது மூத்த மகன் மட்டுமே நண்பர்களுடன் இணைந்து கொலைச் செய்ததாகவும், ஆனால் இளைய மகன்களான கவியரசன், பிரவீன் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளதாகவும் கல்பேஷின் தாய் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதையடுத்து, போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து, 50க்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.