சென்னையில் விசாரணைக்காக சென்ற ரோந்து பணி காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் தண்ணீர் திறக்க மறுத்ததாக அவசர எண் 100க்கு அழைப்பு வந்துள்ளது.
இதனையடுத்து, ரோந்து பணியில் இருந்த காவலர் மஞ்சு, வாகன ஓட்டுநர் பாலாஜி ஆகியோர் விசாரணை நடந்த தனியார் குடியிருப்புக்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்தவர்கள் காவலர் பாலாஜியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரைத் தாக்கியுள்ளனர்.
முகம், கை உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்ட காவலர் பாலாஜி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து, காவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.