அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சினெர் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
சக நாட்டவரான லோரென்சோ முசெட்டி உடன் மோதிய சின்னர், தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினார்.
தொடர்ந்து, 6க்கு 1, 6க்கு 4 மற்றும் 6க்கு 2 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். இவர் அரையிறுதியில் பெலிக்ஸ் ஆகர் அலியாசீம் உடன் மோதவுள்ளார்.