ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் வெளுத்து வாங்கும் கனமைழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் சமீப நாட்களாகப் பலத்த மழைப் பெய்து வருகிறது. இதனால், டெல்லி, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் வெளுத்து வாங்கும் கனமைழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
ஜவஹர்லால் நேரு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீரால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். திரும்பும் திசையெல்லாம் சூழ்ந்து நிற்கும் வெள்ளத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.