சென்னையில் ஆர்சியான் கெமிக்கல் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு ஆர்சியான் கெமிக்கல் என்ற வேதிப்பொருள் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமானவரிஅலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்துச் சென்னையில் உள்ள ஆர்சியான் கெமிக்கல் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் காலை 9 மணி முதல் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.
வடபழனி அப்பாசாமி அடுக்குமாடி குடியிருப்பு, ஆழ்வார்பேட்டையில் மெரிடியன் பில்டர்ஸ் குடியிருப்பு, MRC நகரில் உள்ள TVH பெலிசியா டவர்ஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மற்றும் குஜராத் மாநிலத்தில் மொத்தம் 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக வருமானவரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.