21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதரவாக ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறை சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தற்போது ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இன்னும் எளிதாக மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த சீர்திருத்தத்தால் அனைத்து பொருட்களின் விலையும் குறையும் என்பதால் சாமானிய மக்களுக்கு உதவும் எனவும் அவர் கூறினார்.
ஜிஎஸ்டிக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமான வரிகள் இருந்ததாகக் கூறிய அவர், மருந்துக்கும், காப்பீட்டுக்கும் கூட வரி வசூலிக்கப்பட்டதால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், நடுத்தர மக்களின் வாழ்க்கையை காங்கிரஸ் அரசு கடினமாக மாற்றியிருந்ததாகவும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.