கோவை மாவட்டம் உக்கடம் பேருந்து நிலையத்தில் ஓணம் பண்டிகையையொட்டி கேரளா செல்லும் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
கோவை மாவட்டத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதில் பெரும்பாலானோர் ஓணம் பண்டிகையையொட்டி சொந்த ஊர் நோக்கி புறப்பட்டனர்.
இதனால் உக்கடம் பேருந்து நிலையத்தில் கேரள மக்கள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. அப்போது வரிசையில் காத்திருந்த மக்கள், பேருந்துகளில் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இதே போல ஓணம் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்வதற்காக மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலும் ஏராளமான மக்கள் குவிந்தனர்.
அப்போது நீலகிரி நோக்கி செல்லும் பேருந்துகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக இயக்கப்படாததால் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரின் சமாதானத்தை ஏற்று பயணிகள் கலைந்து சென்றனர்.