மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அக்னி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில், டார்ஜிலிங்கை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் 14 கிலோ மீட்டர் கிரிவலம் மேற்கொண்டு, அண்ணாமலையாரை தரிசித்து வழிபாடு நடத்தினர்.