அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை உடடியாக கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.
கோபியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியை விட்டு சென்றவர்கள் எந்த பொறுப்பையும் எதிர்பார்க்கவில்லை என்றும், அவர்களை உடனடியாக கட்சியில் சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
பிரிந்தவர்கள் சேர்ந்தால் வெற்றி நிச்சயம் என கூறிய அவர், அதிமுக தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்றார்.
10 நாட்களில் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் கூறினார்.