மணிப்பூரில் வன்முறையை கைவிட்டு அமைதி மற்றும் பிராந்திய ஒருமைபாட்டை பராமரிக்க இரு பழங்குடியின குழுக்களும் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
மணிப்பூரில் 2023ஆம் ஆண்டு மைதேயி மற்றும் குகி பழங்குடியினா் இடையே ஏற்பட்ட வன்முறையில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
மைதேயி மற்றும் குகி பழங்குடியின குழுக்களுடன் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முத்தரப்பு ஒப்பந்தம் கையொப்பமானது.
பிரதமா் மோடி அடுத்த வாரம் மணிப்பூா் பயணம் மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்படும் சூழலில், மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க வழிவகுக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலை -2இல் பயணிகள் மற்றும் சரக்குகளின் தடையற்ற போக்குவரத்தை அனுமதிக்க குகி-ஜோ குழு ஒப்புக்கொண்டுள்ளது.