கருமத்தம்பட்டி அருகே உள்ள பண்ணையில் தெரு நாய்கள் கடித்ததில் 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள எளச்சிபாளையத்தில்பாலசண்முகம் என்பவரது பண்ணை உள்ளது.
இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், பண்ணைக்குள் புகுந்த தெரு நாய்கள் நாட்டுக் கோழிகளைக் கடித்து குதறின.
இதில், 100க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் உயிரிழந்ததாகப் பாலசண்முகம் வேதனைத் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகத் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகவும், வெறிபிடித்த நாய்கள் கால்நடைகள் மட்டுமின்றிப் பொதுமக்களையும் கடித்து வருவதாகவும் அவர் கூறினார்.
எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.