கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை மறைத்து எடுத்து வந்த வீடியோ வெளியாகியுள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாகப் பிளாஸ்டிக் டம்ளர்கள், வாட்டர்ப் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் நீலகிரிக்குக் கொண்டு வர தடைச் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பொருட்கள் குறித்து நுழைவுப்பகுதியிலே சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கேரளாவில் இருந்து வந்த வாகனம் ஒன்றின் மேற்கூரையில் தண்ணீர் பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.