இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் அமித் மிஸ்ரா விளையாடியுள்ளார். அபார பந்துவீச்சில் மொத்தம் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், கடைசியாக 2017-ல் பெங்களூருவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் விளையாடினார். இந்நிலையில் ஓய்வை அறிவித்துள்ள அமித் மிஸ்ரா, தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றித் தெரிவித்துள்ளார்.