பேக்கரி பொருட்களுக்கு ஒரே மாதிரியாக 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ள பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அகில இந்திய பேக்கரி கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த கூட்டமைப்பின் தலைவர் அன்புராஜன், பிரட்டுக்கு வரி விலக்கும், பேக்கரி பொருட்களுக்கு ஒரே மாதிரி வரி விதிப்பும் கொண்டு வந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரி குறைப்பு தொழில் முனைவோருக்கும், நாட்டுக்கும் நன்மை பயக்கும் என்றும், உள்நாட்டுப் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது துணிச்சலான முடிவு எனவும் கூறினார். மேலும், பட்டர் பன் 5 சதவீத ஜிஎஸ்டி வரிக்குள் வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.