திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தனது கணவன் வேறு திருமணம் செய்யவுள்ளதாக குற்றம்சாட்டி, பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கே.பந்தரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் சூரிய பிரியா என்பவரை காதல் திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார்.
இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், 50 சவரன் நகைக் கொடுத்தால்தான் திரும்பி வருவேன் எனக் கூறிவிட்டு காளிமுத்துத் தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போவதாக மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து, தனது கணவர் வீட்டின் முன்பு சூரிய பிரியா உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது இரு வீட்டாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.