கூடுதல் வரி நடவடிக்கை மூலம் இந்தியப் பிரதமா் மோடியை சீனாவுடன் கைகோக்கும் நிலைக்கு டிரம்ப் கொண்டு சென்றதாக, அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜான் போல்டன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு காலத்தில் மோடியுடன் தனிப்பட்ட முறையில் டிரம்ப்புக்கு நல்ல நட்பு இருந்தது என்றும், தற்போது அது கடந்த காலமாகிவிட்டது எனவும் கூறியுள்ளார்.
எந்த நாட்டுத் தலைவரும் டிரம்புடன் நட்பு பாராட்டுவதன் மூலம் அவரின் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது எனக்கூறிய அவர், இந்திய – அமெரிக்க உறவு மிகவும் பின்னோக்கிச் சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் வரி நடவடிக்கை மூலம் மோடியை சீனாவுடன் கைகோர்க்கும் நிலைக்கு டிரம்ப் தள்ளிவிட்டாா் என்றும், டிரம்ப்புக்கு மாற்றாகச் சீனா தன்னை முன்நிறுத்தி வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டிரம்ப்பின் நடவடிக்கை சீனா, ரஷ்யா கூட்டணியில் இந்தியாவை இணைத்துவிடும் என ஏற்கெனவே எச்சரித்ததாகவும் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.