தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பருப்பு விநியோகம் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்ட நிலையில் தனியார் நிறுவனங்கள் மோசடி செய்வதால் அரசுக்கு 90 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் 60 ஆயிரம் டன் துவரம் பருப்பை வாங்குவதற்காகத் தனியார் நிறுவனங்களுக்கு நுகர் பொருள் வாணிப கழகம் டெண்டர் கோரியது.
இதில் இறக்குமதி துவரம் பருப்பை வாங்கும் டெண்டர், உள் நாட்டு பருப்பை வாங்கும் டெண்டர் எனத் தனித்தனியே ஒப்பந்தம் கோரப்பட்டு இருந்தது
தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்த இந்த டெண்டரில் இறக்குமதி செய்யப்படும் பருப்பின் விலை 90 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனை ஆய்வு செய்த அதிகாரிகள், தான்சானியா நாட்டின் பருப்பின் விலை 75 ரூபாய் எனவும், மியான்மர் நாட்டின் பருப்பின் விலை 85 ரூபாய் எனவும் தெரிவித்தனர்.
ஆனால் சில தனியார் நிறுவனங்கள் தான்சானியா நாட்டின் பருப்பை வாங்கிவிட்டு மியான்மர் நாட்டின் பருப்பு எனக் குறிப்பிட்டுள்ளதாக கூறினர்.
தனியார் நிறுவனங்களின் இந்த மோசடியால் ஒரு கிலோவுக்கு 15 ரூபாயும் 60 ஆயிரம் டன்னுக்கு 90 கோடி ரூபாயும் அரசுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.