மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!
Sep 13, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லையில் அரசு அறிவித்த நாளை  கடந்தும் பொருநை அரசு அருங்காட்சியகம் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான ஒரு செய்தித் தொகுப்பைத் தற்போது காணலாம்.

திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி நான்கு வழிச் சாலை அருகேயுள்ள சுமார் 13 ஏக்கர் நிலப்பரப்பில், 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொருநை அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனக் கடந்த 2021-ம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

சிவகலை, ஆதிச்சநல்லூர், கொற்கை  போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட பண்டைய நாகரிகக் கலைப் பொருட்களை  காட்சிப்படுத்தும் பொருட்டு, பொதுப்பணித்துறைச் சார்பில் இந்த அருங்காட்சியகம் மிகப் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

கட்டுமான பணிகள் 18 மாதங்களுக்குள் நிறைவடையும் எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் ஏ.வ வேலுவும் 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அருங்காட்சியகம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என உறுதியாகத் தெரிவித்திருந்தார்.

ஆனால், கடந்த 2023-ம் ஆண்டே முதலமைச்சர் ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டுத் தொடங்கிய அருங்காட்சியகக் கட்டுமான பணிகள், 2 ஆண்டுகளைக் கடந்தும் தற்போது வரைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல, 33 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்ட கட்டுமான பணிகளும், தற்போது 56.36 கோடி ரூபாய் வரைச் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அறிவிக்கப்பட்ட காலக்கெடு முடிந்து 5 மாதங்கள் கடந்தும் கட்டுமான பணிகள் இன்னும் முடிவடையாமல் இருப்பது, அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு வழிச்சாலையை ஒட்டி கட்டப்பட்டு வரும் இந்த அருங்காட்சியகத்திற்கு, அதிகாரிகள் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டையும் பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.

மக்கள் வரியாகச் செலுத்தும் பணத்தில் பல கோடி ரூபாயைச் செலவு செய்து கட்டப்பட்டு வரும் அருங்காட்சியத்தைச் சுற்றி, ஒரு சிசிடிவி கேமரா கூட இல்லாத காரணத்தால் அப்பகுதியில் பல சட்டவிரோதச் செயல்கள் அரங்கேறி வருவதாகவும் அவர்கள் வேதனை  தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்காலும், மந்தமாக நடைபெற்று வரும் கட்டுமான பணிகளாலும், பொருநை அரசு அருங்காட்சியகம் மக்கள் பயன்பாட்டிற்கு வர இன்னும் ஒராண்டு வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக மக்களின் பண்டையகால பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை, வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ள பெருதவியாக இருக்கக்கூடிய இந்த அருங்காட்சியகத்தின் கட்டுமான பணிகளை, விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நெல்லை வாழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: Government Museum work in progress: Request to the government to take urgent actionஅரசுக்கு கோரிக்கைஅரசு அருங்காட்சியக பணிகள்பொருநை அரசு அருங்காட்சியகம்
Share
Tweet
SendShare
Previous Post

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

Next Post

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies