அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி - தீராத துயரத்தில் பயணிகள்!
Sep 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 08:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை எனப் புகார் எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் மதுரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருச்சி, சிவகங்கை, சிவகாசி, விருதுநகர், திருச்செந்தூர் என பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மதுரை மாட்டுத்தாவணி எம் ஜி ஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரையிலான மக்கள் பயன்படுத்தும் இந்தப் பேருந்து நிலையத்தில் பண்டிகைக் காலம் என்றால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்தப் பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

பராமரிப்பு எனும் பெயரில் பூட்டப்பட்ட ஆண்களுக்கான கழிப்பறை கடந்த ஆறு மாதங்களாகத் திறக்கப்படாததால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பேருந்து நிலையத்தின் கழிப்பறைகள் மூடியிருப்பதை சாதகமாக பயன்படுத்தி தனியார் கழிப்பறைகள் அதிகக் கட்டணத்தை வசூலித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பேருந்து நிலையத்தின் கழிவுநீர்க் கால்வாய்கள் முறையாகத் தூர்வாரப்படாததன் காரணமாகக் கழிவுநீர் ஆங்காங்கே வெளியேறி சுகாதாரச் சீர்கேடு நிலவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பயணிகளுக்காக மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுச் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கும் இயந்திரமும் யாருக்கும் பயனற்ற நிலையில் காட்சிபொருளாகவே காட்சியளிக்கின்றன

தூங்காநகரம் எனப் பெயர்பெற்ற மதுரையில் அமைந்துள்ள மிகப்பெரிய பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படி இரவு பகலாக லட்சக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையம் அடிப்படை வசதிகளின்றிக் காணப்படுவது பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக  கவனம் செலுத்தி பேருந்து பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருவதோடு, பேருந்து நிலையத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags: மாநகராட்சிWhere are the basic amenities? : The slumbering corporation - commuters in endless miseryதீராத துயரத்தில் பயணிகள்மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்
Share
Tweet
SendShare
Previous Post

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

Next Post

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies