பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்...!
Oct 28, 2026, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 08:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான பாண்டியா சகோதரர்களின் ஆக்ரோஷமான ஆட்டம் அனைவரும் அறிந்ததே. அதிரடிக்குப் பெயர் போன அவர்களின் இளகிய மனம், ஆசிரியர்  தினத்தின் மூலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களாக அறியப்படும் பாண்ட்யா சகோதரர்களான ஹர்திக் மற்றும் க்ருணால் ஆகிய இருவரும், மைதானத்தில் கடுமையான போட்டியாளர்களாக அறியப்படுபவர்கள். ஐபிஎல் போட்டியில் எதிரெதிர் அணியில் ஆக்ரோஷமாக விளையாடி மைதானத்தில் ஆதிக்கம் செலுத்திக் கூடிய இருவரும், தனது பயிற்சியாளருக்கு எப்படியெல்லம் உதவியிருக்கிறார்கள் என்ற செய்திதான் ஆசிரியர்  தினத்தையொட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏராளமான போட்டிகள், எத்தனையோ சவால்கள் எனப் பலவற்றையும் கடந்து வந்த இருவரும், தங்களது இளமைக் கால கிரிக்கெட் பயிற்சியாளர் ஜிதேந்திர  சிங்கை தற்போதும் நினைவில் வைத்து அவருக்கு உதவி வருகின்றனர்.

பயிற்சியாளர் ஜிதேந்திர  சிங்கை தங்களது நெருங்கிய குடும்ப உறுப்பினரைப் போலவே எண்ணி, அவருக்கு உதவி வருகின்றனர்  பாண்ட்யா சகோதரர்கள். கிரிக்கெட் பயிற்சியாளர் ஜிதேந்திர  சிங்கின் முதல் சகோதரியின் திருமணம் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது அவருக்குப் பணம் கொடுத்த உதவியிருக்கின்றனர்ப் பாண்ட்யா சகோதரர்கள்.

அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜிதேந்திர  சிங்கின் இரண்டாவது சகோதரியின் திருமணத்தின்போது கார் வாங்க 20 லட்சம் ரூபாய் கொடுத்து உதவிய இருவரும், பிற பரிசும் பொருட்களையும் வழங்கி ஆதரவை நல்கியுள்ளனர். இதுகுறித்து நெகிழ்சியாகப் பேசியுள்ள ஜிதேந்திர  சிங், உங்கள் சகோதரரி தமது சகோதரி போல்தான் என்று ஹர்திக் குறிப்பிட்டதாகச் சுட்டிக்காட்டி நெகிழ்ந்துள்ளார். தனது சகோதரிகளின் திருமணத்திற்கான அனைத்துத் தேவைகளையும் அவர்கள் கவனித்துக் கொண்டதாகவும் ஜிதேந்திரா தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளர் ஜிதேந்திராவின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டிருந்தபோதும் அவருக்கு ஹர்திக் உதவியுள்ளார். அதுகுறித்து மனம் திறந்துள்ள ஜிதேந்திரா, தனது தாயின் உடல்நிலை  சரியில்லாததை அறிந்ததும் தயவுசெய்து தன் பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு அவருக்கான சிகிச்சையை உறுதிப்படுத்துமாறு ஹர்திக் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

இது அவர்களின் தாராள மனப்பான்மைக்கான முதல் எடுத்துக்காட்டு என்றும் ஜிதேந்திரா நெகிழ்வுடன் கூறியிருக்கிறார். “2015-16ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய பிறகு ஹர்திக் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு காரைப் பரிசளித்திருக்கிறார். பொருளாதார ரீதியாக வலுவாக இல்லாத சூழலிலும் ஹர்திக் தனக்குக் காரை பரிசளித்தபோது ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளார் ஜிதேந்திரா.

2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் வெற்றிக்குப் பிறகும், ஹர்திக்கும், க்ருனாலும் தனது பயிற்சியாளருக்கு நிதியுதவி அளித்திருக்கின்றனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கும் பின்னும் பயிற்சியாளருக்குப் பாண்ட்யா சகோதரர்கள் உதவியிருக்கின்றனர்.

இவ்வாறாகப் பாண்டியா சகோதரர்களிடமிருந்து சுமார் 80 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி கிடைத்திருப்பதாகவும், அவர்கள் மாணவர்களாகக் கிடைத்தது தமக்கு கிடைத்த மிகப்பெரும் அதிர்ஷ்டம் என்றும் நெகிழ்ந்துள்ளார்  பயிற்சியாளர் ஜிதேந்திரா. இதன் மூலம் பாண்ட்யா சகோதர்களின் உதவும் மனம் உலகிற்குத் தெரியவந்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: Cricketteachers dayGurudakshan to the coach: The kindness of the Pandya brothersபயிற்சியாளருக்கு குருதட்சணைபாண்ட்யா சகோதரர்கள்
Share
Tweet
SendShare
Previous Post

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

Next Post

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

Related News

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மதுரை – குருவாயூர் ரயிலில் ‘விஸ்டாடோம்’ பெட்டி : மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கும் பயணிகள் சிறப்பு தொகுப்பு!

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

எதிர்கட்சிகளின் அராஜகத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுங்கள் : எச்சரிக்கும் இந்திய வம்சாவளி அறிஞர்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies