அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை அகற்ற முடியும் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளையொட்டி நெல்லையில் உள்ள மணிமண்டபத்தில் அவர் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செங்கோட்டையன் அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சிப்பது ஒரு நல்ல விஷயம் என்றும், அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்து தாம் பேசுவது சரியாக இருக்காது எனவும் கூறினார்.
அரசியலில் எதுவுமே நிரந்தரம் கிடையாது என்றும், கடைசி ஒரு மாதத்தில் கூட நிறைய மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டார். மேலும், பாஜகவில் குடும்ப அரசியல் இல்லை எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
















