குற்றவாளிகள் வாகனங்களில் தப்பிச் செல்வதை தடுக்க அமெரிக்காவில் கிராப்ளர் என்கிற புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் வாகனங்கள் திருடப்படுவதை தடுக்கவும்,, குற்றவாளிகள் வாகனங்களில் தப்பிச் செல்லும் போது பிடிப்பதையும் எளிமையாக்குகிறது.
இந்தச் சாதனம் பொதுவாக அம்பு எய்வதை போல பயன்படுத்தப்படுகிறது. அதாவது, ஒரு காரில் இருந்து இதனை எய்த பிறகு, அது குறிவைக்கப்படும் வாகனத்தைக் கச்சிதமாக கவ்விப் பிடித்துக் கொள்கிறது.
இதன்மூலம் குற்றவாளிகள் செல்லும் வாகனத்தின் வேகத்தை குறைப்பதுடன், அவர்களை எளிதில் பிடிக்க உதவுகிறது.