மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் நடிகரும், பாடகருமான அனிர்பன் பட்டாச்சார்யா மற்றும் அவரது ராக் இசைக்குழு, சனாதன தர்மத்தை கேலி செய்ததாகவும், மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இவரது இசைக்குழு நடத்திய இசை நிகழ்ச்சியில் மத நம்பிக்கைகளைக் கேலி செய்து, அரசியல் கட்சிகளை அவமதிப்பது போன்ற பாடல்கள் பாடப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வழக்கறிஞரும், பாஜக தலைவருமான தருண் ஜோதி திவாரி போலீசில் புகார் அளித்துள்ளார்.