வர்த்தக வரிவிதிப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
வர்த்தகப் பிரச்னைகளில் அமெரிக்கத் தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.
4 நாடுகளின் நலன்கள் குறித்து விவாதிப்பதற்கான மதிப்புமிக்க மன்றமாகக் குவாட்டை பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
உக்ரைனில் அமைதியை நிலைநாட்டும் சமீபத்திய முயற்சிகள் அனைத்தையும் நாங்கள் வரவேற்கிறோம் என்றும் அனைத்துத் தரப்பினரும் ஆக்கப்பூர்வமாக முன்னேறுவார்கள் என நம்புகிறோம் என அவர் கூறினார்.
மோதலுக்கு முன்கூட்டியே முடிவு கட்டவும், நீடித்த அமைதியை ஏற்படுத்தவும் இந்தியா ஆதரவளிக்கிறது என்று அவர் கூறினார்.