ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்களை தொடர் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், பல உயிர்களை பலி கொண்டது.
அந்தப் பாதிப்பில் இருந்து மக்கள் இதுவரை மீண்டு வந்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் இன்று மீண்டும் தொடர்ந்து நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்றும் நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களில் அங்கு 8 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
			 
                    















