சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ள நிலையில் ஒரு சவரன் 80 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வரலாற்றில் புதிய உச்சமாக இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 140 ரூபாய் அதிகரித்து 10 ஆயிரத்து 5 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஆயிரத்து 120 ரூபாய் அதிகரித்து 80 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல வெள்ளியும் கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 138 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 38 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு , டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் சா்வதேசச் சந்தையில் முதலீட்டாளா்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆா்வம் காட்டிவருகின்றனா்.
இதனால், உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. அதன் படி கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு நான்காயிரத்து 800 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.