இந்தியா – நேபாளம் இடையே நிலவும் லிபுலேக் கணவாய் பிரச்னையை எழுப்பி சீன அதிபர் ஜி ஜின்பிங்-யிடம் நேபாளப் பிரதமர் சர்மா ஒலி முறையிட்டார்.
ஆனால் அவரது முறையிட்டை சீன நிராகரித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. லிபுலேக் கணவாய் பகுதி தொடர்பாக இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே மோதல் நிலவுகிறது.
லிபுலேக், கலாபானி, மற்றும் லிம்பியாதுரா பகுதிகளைத் தங்களுக்குச் சொந்தமானது என்று நேபாளம் உரிமை கோருகிறது.
ஆனால், இந்தியா, இந்த நிலங்கள் தங்களுக்குச் சொந்தமானவை என்று மறுத்து, உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியாகும் என்று கூறுகிறது.
கொரோனா மற்றும் அடுத்தடுத்த இந்தியா-சீனா நெருக்கடிகள் காரணமாக மூடப்பட்டிருந்த லிபுலேக், ஷிப்கி லா மற்றும் நாதுலா கணவாய்கள் வழியாக எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இந்தியா மற்றும் சீனா முடிவு செய்துள்ளன. இதற்கு நேபாள அரசு கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்தது,
இந்நிலையில், இப்பிரச்சனை எழுப்பி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேபாளப் பிரதமர் சர்மா ஒலி சந்தித்தார். அப்போது, இது இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான இருதரப்பு பிரச்னை என்றும், அதில் நாங்கள் தலையிட முடியாது என நிராகரித்தார்.