ஜப்பானின் ஷிசுவோகா மாகாணம் புயல் தாக்குதலால் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது.
யோஷிடா, மகினோஹாரா உள்ளிட்ட நகரங்கள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஷிசுவோகா சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய பலத்த காற்றால் இருநூறுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தன.
இதில் இருபதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. பல்வேறு வாகனங்களும், வீடுகளும் சேதமடைந்திருப்பது, அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.