திருச்செந்தூர் அருகே புன்னக்காயல் மீனவ கிராமத்தில் 40 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிப்படுவதாகக் கூறி ஆயிரக்கணக்கானோர் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் அருகில் உள்ள புன்னக்காயல் மீனவ கிராமத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் 40 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருவதால் அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு ஆதரவாக அதிமுக, பாஜக, தவெக, விசிக, நாதக, உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ஊர்மக்கள் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டும் இதுவரை முறையான தண்ணீர் வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டு எழுந்துள்ளது.