32 ஆண்டுகளில் முதல் முறையாக ரஷ்யாவிடமிருந்து கோழி முட்டைகளை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகளால் பொருளாதாரத் தடைகள் இருந்த போதிலும், கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்குக் கோழி முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளனது.
நடப்பாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் பறவை காய்ச்சல் மற்றும் பற்றாக்குறை காரணமாக கோழி முட்டையின் விலை 16 சதவீதம் அதிகரித்தது. இதையடுத்து முட்டைத் தட்டுப்பாட்டை போக்க, கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவிடம் இருந்து கோழி முட்டைகளை அமெரிக்கா இறக்குமதி செய்திருக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து அமெரிக்கா – ரஷ்யா இடையிலான வர்த்தகம் கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், கடந்தாண்டு ரஷ்யாவிலிருந்து இரண்டு லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக அமெரிக்கப் பொருளாதார பகுப்பாய்வு பணியகத்தின் தரவுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.