கோவை வன சரக்கத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு ஆய்வு நடத்தினர்.
வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அச்சுறுத்துவதும், விளை நிலங்களை சேதப்படுத்துவதுமாக இருந்து வந்தது.
இதனை தடுக்கும் நடவடிக்கையாக ஒட்டிய அட்டுகல் முதல் பொம்மணம்பாளையம் வரையிலும், பெரும்பள்ளம் முதல் தேவராயபுரம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் உருக்கு கம்பி வேலி அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விலங்குகள் நல ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அப்போது இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் குழு சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்துவதாகத் தெரிவித்தனர். அதன் படி ஆய்வு மேற்கொண்ட நீதிபதிகள் குழுவிடம் விவசாயிகளும், பொதுமக்களும் தங்களின் குறைகளை எடுத்துரைத்தனர்.