தஞ்சை மாவட்டம், ஆடுதுறையில் பாமக நிர்வாகியை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகள் பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆடுதுறைப் பேரூராட்சி மன்ற தலைவராகவும் பாமக நிர்வாகியுமான ம.க ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் அவரை கொலை செய்ய முயன்று தப்பியோடினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தனிப்படைப் போலீசார், ராகவன் பேட்டையில் குற்றவாளிகள் பயன்படுத்திய கார் நின்றதை கண்டனர். பின்னர் காரை பறிமுதல் செய்தபோலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.