திண்டுக்கல்லில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது செய்தியாளரின் செல்போனை அதிமுகவினர் பறித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் கட்சி நிர்வாகிகளுக்கு உணவு பரிமாறப்பட்டது.
உணவு காலியானதால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனை செய்தியாளர்கள் படம் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அதிமுகவினர் சிலர், தனியார்ச் செய்தி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரின் செல்போனை பறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை கண்டித்து செய்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், செய்தியாளர்களைச் சமாதானத்தப்படுத்தி போராட்டத்தை கலைத்தனர்.