ஜப்பானின் புதிய இளவரசராக ஹிசாஹிட்டோ என்ற 19 வயது இளைஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் மிகக் குறைந்த வயதில் ஒருவர் இளவரசராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
ஜப்பானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி முறை இருந்து வந்தாலும், இங்கிலாந்தை போல மன்னராட்சியும் நீடித்து வருகிறது. ஜப்பானில் தற்போதைய மன்னராக நருஹிடோ உள்ளார். இவருக்கு மகோ என்ற ஒரே ஒரு மகள் மட்டும்தான் உள்ளார்.
ஜப்பானில் பெரும்பாலும் ஆண் வாரிசுகள் மட்டும்தான் ஆட்சி கட்டிலில் அமர்வது வழக்கம். பெண் வாரிசுகள் ஆட்சியை நடத்தியது அரிதாகவே நடைபெற்றுள்ளது. இதுவரை 8 பெண் வாரிசுகள் மட்டுமே தனது தந்தைக்குப் பிறகு ஆட்சியை தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், தற்போதைய மன்னரின் மகளான மகோ 2021ம் ஆண்டு அரசக் குடும்பத்தை சேராத ஒருவரை காதலித்து மணமுடித்துக் கொண்டார்.
ஜப்பானிய வழக்கபடி, அரசக் குடும்பத்தை சேர்ந்த பெண்கள், அரசக் குடும்பத்தை சாராத ஒருவரைத் திருமணம் செய்து கொண்டால், அவரது அரசக் குடும்ப தகுதி பறிக்கப்படும். அவ்வாறுதான், இளவரசி மகோவின் தகுதி பறிபோனது.
இதனையடுத்து மன்னர் நருஹிடோவுக்குப் பிறகு யார், ஆட்சியைத் தொடர்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. மன்னர் நருஹிடோவுக்கு Fumihito என்ற சகோதரர் உள்ளார். அவருக்குத் தற்போதே 59 வயதாகிவிட்டது. Sayako Kuroda என்ற சகோதரி உள்ளார். அவருக்கும் 56 வயதாகிவிட்டது.
இருப்பினும், அரச மரபுபடி, மன்னரின் சகோதரரான Fumihito தற்போதைய இளவரசராக உள்ளார். அவருக்கு Hisahito என்ற மகன் உள்ளார். மன்னருக்கு மகன் இல்லாததாலும், அவரது சகோதரருக்கு ஏற்கனவே வயதாகிவிட்டதாலும், ஜப்பானின் அடுத்த மன்னராக Hisahito-தான் பொறுப்பேற்பார் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில்தான், அவருக்கு 19 வயது நிறைவடைந்தது. இதனையடுத்து, ஜப்பானிய வழக்கப்படி இதற்கான பாராம்பரிய விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. டோக்கியோவில் நடைபெற்ற விழாவில், அவருக்குக் கருப்பு பட்டும், கிரீடமும் வழங்கப்பட்டது.
ஜப்பானிய அரசக் குடும்பத்தின் 2வது இளவரசரான அவர், தனது பொறுப்புகளைப் புரிந்து தனது கடமையைச் சிறப்பான முறையில் நிறைவேற்றுவேன் என அப்போது கூறினார்.
ஒருவேளை அவரது தந்தை மன்னராக பொறுப்பேற்க முடியாமல் போகலாம். ஆனால், இளம் வயதுடைய Hisahito கட்டாயம் அடுத்த மன்னராகும் வாய்ப்பு உள்ளது. இதனால், அரசக் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.