மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!
Sep 12, 2026, 01:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

Murugesan M by Murugesan M
Sep 6, 2025, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகின் மிகவும் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்றான மலாக்கா ஜலசந்தி ரோந்துப் படைப்பிரிவில் இந்தியாவும் இணைந்தது குறித்த செய்தித் தொகுப்பை  தற்போது பார்ப்போம்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கும் மலேசிய தீபகற்பத்திற்கும் இடையில் அமைந்துள்ளது மலாக்கா ஜலசந்தி. அந்தமான் கடலையும், தென்சீனக் கடலையும் இணைக்கும் மலாக்கா ஜலசந்தி, மலேசியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமான மலாக்காவின் பெயரால் அழைக்கப்படுகிறது.

உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மலாக்கா ஜலசந்தி, உலகின் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்று. கடற்கொள்ளை, பயங்கரவாதம் மற்றும் கடத்தலைத் தடுப்பதற்காக இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளால் கடந்த 2004ஆம் ஆண்டு மலாக்கா நீரிணை ரோந்து படை உருவாக்கப்பட்டது. பின்னர் இதில் தாய்லாந்து இணைந்தது. MSPயின் நீண்ட கால ஒருங்கிணைப்பாளராகச் சிங்கப்பூர் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சிங்கப்பூர்  பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கும் இடையேயான சந்திப்பின் போது மலாக்கா ஜலசந்தி ரோந்து பணியில் இணைவதற்கான ஒப்புதல் கிடைத்தது.

செயற்கை நுண்​ணறி​வு, குவாண்​டம் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் தொழில்​நுட்​பம் ஆகியவற்றில் பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இந்தோ-பசிபிக் முழுவதும் கடல்சார்  பாதுகாப்பை மேம்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

இந்தியாவின் கடல்வழி வர்த்தகத்தில் சுமார் 60% சதவீதம், மலாக்கா ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. மலாக்கா ஜலசந்தியில் இருந்து 600 கிலோமீட்டர்  தொலைவில் உள்ள அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் இந்திய கடற்படைத் தனது தளத்தை விரிவுபடுத்தி இருக்கிறது.

இதனால் அங்கு ரோந்து மேற்கொண்டு கடற்கரை மாகாணங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்த MSPயின் ஆதரவை நாடியது. இதன் மூலம் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தி இந்தியா தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த முடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். MSPயில் இந்தியா இணைவது தங்களுக்கும் கூடுதல் பலம் சேர்க்கும் என்று சிங்கப்பூர் நம்புகிறது.

தென் சீனக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படை ஆதிக்கம் இருந்து வரும் நிலையில், MSPயில் இந்தியா இணைந்ததால், ஆசிய கடல்சார்  பாதுகாப்பு உறவு, குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: singaporePatrolling the Strait of Malacca: India joins MSPமலாக்கா ஜலசந்தியில் ரோந்து
Share
Tweet
SendShare
Previous Post

ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் – கடைசி ஆண் வாரிசு?

Next Post

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies