கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் - கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?
Sep 12, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

Murugesan M by Murugesan M
Sep 6, 2025, 08:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்ட கராச்சி-பெஷாவர் திட்டத்திற்கு நிதியளிப்பதிலிருந்து சீனா பின்வாங்கி உள்ளது. அதற்கான காரணம் குறித்து, இந்தச் செய்தி தொகுப்பில் வரிவாகக் காண்போம்.

சீனாவும், பாகிஸ்தானும் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. இந்தியா உடன் எல்லைப் பிரச்னையைக் கொண்டுள்ள சீனாவும் பாகிஸ்தானும், மற்றொரு புறம் ஒன்றுக்கொன்று கைகோர்த்து நட்புறவை  பேணி வருகின்றன.

பாகிஸ்தானின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, கடன் மற்றும் மானியமாக நிதி வழங்குவது எனப் பல்வேறு உதவிகளைச் செய்து வந்த சீனா, அந்நாட்டுடனான வர்த்தகத்தையும் அதிகரிக்கச் செய்தது. இதனால் ஏராளமான ராணுவ தளவாடங்களை  பாகிஸ்தானுக்கு விற்பனை  செய்தது சீனா. பாகிஸ்தான் பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்படும் ராணுவ தளவாடங்களில் பெரும்பாலானவை  சீனாவின் தயாரிப்பே.

இந்தச் சூழலில் சீனாவின் ஆதரவுடன் பாகிஸ்தான் செயல்படுத்திய திட்டம்தான் கராச்சி-பெஷாவர்த் திட்டம். 1,800 கிலோமீட்டர் நீளமுள்ள கராச்சி – பெஷாவர் திட்டம், பாகிஸ்தானின் முக்கிய ரயில் பாதைகளை நவீனமயமாக்கி, கராச்சியையும் பெஷாவரையும் இணைக்க  செயல்படுத்தப்பட்டது.

பயணிகளின் எண்ணிக்கையும், சரக்கு பரிமாற்றத்தையும் அதிகரித்து, பாகிஸ்தான் ரயில்வேயின் செயல்திறனை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கம். சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் முக்கியப் பகுதியாகவும் இத்திட்டம் பார்க்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்கெனவே 2015-19 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தானில் நெடுஞ்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் கட்டப்பட்டு வந்தன.

இத்திட்டத்தின் ஒரு பகுதியான குவாதர்  கிழக்கு விரிகுடா விரைவுச் சாலைக் கடந்த 2022இல் நிறைவடைந்தது. இந்த நிலையில், கராச்சி-பெஷாவர்  திட்டத்திற்கு நிதி வழங்க சீனா மறுத்துவிட்டது. அத்துடன் இந்தத் திட்டத்திலிருந்தும் சீனா வெளியேறியிருப்பது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

பாகிஸ்தானின் மோசமான நிதி நிலைமை, கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உள்ள சிரமம், மின்துறை முதலீடுகளில் நிலுவைத் தொகைப் பிரச்னை ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்திலிருந்து சீனா வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

மேலும், சீனா பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்து வருவதாலும், அதிக அபாயமுள்ள நாடுகளில் முதலீட்டை  குறைக்கும் போக்கும் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அத்துடன் அமெரிக்கா-சீனா இடையேயான உறவு மோசமடைந்து வருவதும், இந்தியா-சீனா இடையே நல்லுறவு மேம்படுவதும் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

சீனாவின் முடிவால் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கும் பாகிஸ்தான், கராச்சி-பெஷாவர்  திட்டத்திற்காக 2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியளிக்கக்கோரி ஆசிய மேம்பாட்டு வங்கியை நாடியுள்ளது. இருப்பினும் சீனாவின் ஆதரவின்மையால் கராச்சி-பெஷாவர்  திட்டத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், சீனாவின் இந்த முடிவு பாகிஸ்தானுக்குப் பெரிய அடியாகப் பார்க்கப்படுகிறது.

Tags: கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?பாகிஸ்தான்today newsசீனாpakistan news todayPakistan shocked by China's abandonment - Karachi-Peshawar project in question?
Share
Tweet
SendShare
Previous Post

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

Next Post

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies