"காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை" - ஒப்புக்கொண்ட கனடா அரசு!
Oct 27, 2026, 06:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

Murugesan M by Murugesan M
Sep 6, 2025, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாகக் கனடா மாறிவிட்டது என்று தொடர்ந்து இந்திய அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில், இப்போது கனடாவை ஒரு தளமாகக் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்துகின்றன என்று அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த அமைப்புகள் எப்படி நிதி திரட்டுகிறது ? எப்படிப் பயங்கரவாத செயல்களைத் திட்டமிடுகிறது ? என்பதையும் கனடா அரசின் அறிக்கை விரிவாக விளக்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

நிதி மோசடி மற்றும் பயங்கரவாத நிதி அபாயங்கள் குறித்த இந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு அறிக்கையை கனடா அரசின் நிதி துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், Babbar Khalsa International மற்றும் International Sikh Youth Federation ஆகிய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை அரசியல் ரீதியாகச் செயல்படும் வன்முறைத் தீவிரவாதம் (PMVE) என்ற பிரிவின் கீழ்க் கனடா அரசு பட்டியலிட்டுள்ளது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்தப் பயங்கரவாத அமைப்புகள், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்காகத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் நிதி நெட்வொர்க்குகளைத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றன.

வங்கிகள், கிரிப்டோகரன்சிகள், அரசு ஆதரவு மற்றும் தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்தும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போலவே, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளும் அதே வழிகளில் நிதி திரட்டுவதாகவதாகவும், புலம்பெயர்ந்த சீக்கியர்களிடமிருந்தும் நன்கொடைகளைப் பெறுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இதையெல்லாம் கனடாவின் சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு பிரிவினர்  கண்டுபிடித்து அறிக்கையாகக் கொடுத்துள்ளனர் என்றும் அரசின் நிதித்துறை அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும்,1980 களிலிருந்து பெரும்பாலும் கனடாவில் இயங்கும் காலிஸ்தான் பயங்கரவாதிகளிடமிருந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தல் வருகிறது என்றும், இந்தியாவின் பஞ்சாபில் காலிஸ்தான் என்ற தனி நாட்டை  பயங்கரவாதத்தின் மூலம் ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம் என்றும் கனடா அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், கனடாவின் உயர்மட்ட உளவுத்துறை நிறுவனமான கனடா பாதுகாப்பு புலனாய்வு சேவைல காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் வன்முறையை ஊக்குவிக்கவும், நிதி திரட்டவும், திட்டமிடவும் கனடாவை ஒரு தளமாக  பயன்படுத்துவதாக ஒப்புக்கொண்டது.

வெளிநாட்டுச் செல்வாக்கு மற்றும் உள்நாட்டுப் பயங்கர வாத நிதி நெட்வொர்க்கள் ஆகியவற்றை இரண்டையும் கடுமையாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், காலிஸ்தான் பயங்கரவாத அபாயங்களைக் கருத்தில் கொண்டு, முழுமையாக மதிப்பீடு செய்து நடவடிக்கை எடுக்கக் கனடா அரசுக்கு இந்த அறிக்கைப் பரிந்துரை செய்துள்ளது.

முன்னதாக, இந்தியாவால் தேடப் படும் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்திப் சிங் நிஜ்ஜார் 2023-ல் கனடாவில் கொலைச் செய்யப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாக முன்னாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதைத் தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரிகளை  கனடா அரசு வெளியேற்றியது. இந்தியாவும் கனடாவின் 6 மூத்த தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது.

இந்தச் சூழலில், கனடாவில் பிரதமர் மார்க் கார்னியின் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்தியாவுடனான உறவைச் சீரமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது . கடந்த ஜூனில் கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியதை  தொடர்ந்து, இரு நாடுகளும் தூதர்களை புதிதாக நியமிக்க ஒப்புக்கொண்டனர்.

கடந்த மாதம், கனடா தனது புதிய இந்திய தூதராக கிறிஸ்டோபர்  கூட்டரை (Christopher Cooter) நியமித்தது.தொடர்ந்து, இந்தியாவும் கனடாவுக்கான தனது புதிய தூதராகத் தினேஷ் பட்நாயக்கை நியமித்துள்ளது.

இந்நிலையில்,காலிஸ்தான் பயங்கர வாதத்தை  கனடா ஒப்புக்கொண்டுள்ளது. இருநாட்டின் உறவுகள் மேம்படுவதற்கான நல்ல அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.

Tags: Canada"It is true that Khalistan has become a haven for terrorists" - Canadian government admitsகனடா அரசுகாலிஸ்தான் பயங்கரவாதிகள்
Share
Tweet
SendShare
Previous Post

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

Next Post

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

Related News

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மதுரை – குருவாயூர் ரயிலில் ‘விஸ்டாடோம்’ பெட்டி : மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கும் பயணிகள் சிறப்பு தொகுப்பு!

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

எதிர்கட்சிகளின் அராஜகத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுங்கள் : எச்சரிக்கும் இந்திய வம்சாவளி அறிஞர்கள் – சிறப்பு தொகுப்பு!

உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜாம்நகர் டீசல் : இந்தியாவை நாடும் அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

“எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” : இந்தியாவை பாராட்டி தள்ளிய அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies