ஓபிஎஸ், டிடிவி தினகரனிடம் சமரசம் பேச தயார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே நோக்கம் என தெரிவித்தார். திமுக ஆட்சியை அகற்ற நினைக்கும் கட்சிகள் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும் என்றும், சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதாகவும் கூறினார்.
ஓபிஎஸ், மற்றும் டிடிவி தினகரனை இணைக்க வேண்டியதே தமது நிலைப்பாடு என்றும், அதற்காக இருவரிடமும் பேச தயார் எனவும் தெரிவித்துள்ளார்.