சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் பத்திரிகையாளர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
டிஜிபி அலுவலக வாயிலில் நேற்று விசிகவினர் மற்றும் புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் ஏர்போர்ட் மூர்த்தி கத்தியால் வெட்டியதில் ஒருவர் காயமடைந்ததாக கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிகவினர் புகார் அளித்தனர்.
அப்போது ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவினர்தான் முதலில் தாக்கியதாக கூறி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு பதிலளிக்காமல் ஏர்போர்ட் மூர்த்தியின் தூண்டுதலின் பேரில் வந்தவர் எனக் கூறி பத்திரிக்கையாளர்களுடன் விசிக மாநில துணை பொது செயலாளர் ரஜினிகாந்த் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.