சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் நடை பிற்பகலுக்கு மேல் அடைக்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் நடை வழக்கமாக மதியம் ஒரு மணிக்கு சாத்தப்பட்டு, மாலை நான்கு மணிக்கு நடை திறக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்படுகிறது. அதன்பிறகு நாளை கிரகண பூஜை முடிந்து அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
இந்த சூழலில், அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கிரிவலம் சுற்றி வருகின்றனர்.