வார விடுமுறையையொட்டி குற்றால அருவிகளில் தமிழக மற்றும் கேரள சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
வார விடுமுறையையொட்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான குற்றால அருவிகளுக்கு தமிழக சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். ஓணம் பண்டிகையை கொண்டாடிய கேரள சுற்றுலா பயணிகளும் குற்றால அருவிகளில் குவிந்துள்ளதால் கூட்டம் அலைமோதியது.
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சீராக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு உற்சாகமடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.