காந்தி கண்ணாடி திரைப்படத்தை வெற்றி படமாக்கிய தமிழக மக்களுக்கு நடிகர் பாலா நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் பாலா நடித்த காந்தி கண்ணாடி திரைப்படம் தமிழக முழுவதும் திரையிடப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் ஏஆர்ஆர்எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ரசிகர்களுடன் நடிகர் பாலா திரைப்படத்தை கண்டு ரசித்தார். ரசிகர்களுடன் ஆடி, பாடிய நடிகர் பாலா, அவர்களுடன் செல்பி எடுத்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரைப்படத்திற்கு மக்கள் அளித்துள்ள வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார். மேலும், காந்தி கண்ணாடி திரைப்படத்தை வெற்றி படமாக்கிய தமிழக மக்களின் பாதம் தொட்டு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.